Posts

💥கோவை புத்தக திருவிழா💥

Image
 💥கோவை புத்தக திருவிழா💥  சா.மு.பரஞ்சோதி பாண்டியன் நிலம் உங்கள் எதிர்காலம் மற்றும் ரியல் எஸ்டேட் அகராதி புத்தகம் கடை எண் : 2 மயிலவன் பதிப்பகத்தில் விற்பனைக்கு உள்ளது.  இடம்: மீனாட்சி மஹால், அவிநாசி சாலை (நவ இந்தியா பேருந்து நிலையம் அருகில்) கோயம்புத்தூர் நாள் : 23-04-2024 முதல் 05-05-2024 வரை  மேலும் விபரங்களுக்கு 9841665836  www.paranjothipandian.com #bookfair #books #bookshelf #booklover #bookfair #bookreaders #bookseller #indianreaders #indianbook #covai #nilamungalethirgalam #realestatedictionary #tamilbook #realestate #mailavanpathipapagam #bookfestival #bookfestival2024

கல்ராயன் மலையில் ஒரு பயணம்!

Image
 கல்ராயன் மலையில் ஒரு பயணம்! கல்ராயன் மலை, கல்வராயன்மலை என்று சேலம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 1000 சதுர கிலோமீட்டருக்கு மேல் பரந்து விரிந்து நிற்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 அடியில் இருந்து 3000 அடிவரை உயரத்தில் மலைகள் பள்ளமும், மேடும், சரிவும், சமதளமாக எங்கு பார்த்தாலும்  பச்சையாக மரமும், செடியும், புதரும், பயிரும் என்று இயற்கை செழிப்புடன் நிற்கிறது. நீரோடை, கோமுகிஆறு, நீர் வழிகள், வளைந்து நெளிந்து போகும் தார்சாலைகள், பச்சை பேப்பரில் பழுப்பு வண்ணத்தில் அங்காங்கே கோடு கிழித்தது போல. மலை நடைபாதைகள் என்று இயற்கையின் கொடை கொட்டி கிடக்கின்ற மலை. ஆனால் ஊட்டி போல் ஏற்காடு போல் பொதுமக்களிடம் சந்தைபடுத்தபடாத மலை. இந்த மொத்த நிலபரப்பும் இனாம் எஸ்டேட்டாக நவாப் நியமித்த ஜாகிர்களிடம் இருந்தது. அவர்கள் இந்த பகுதியை 500 ஆண்டு காலமாக ஆளுகை செலுத்தி வந்தார்கள். இங்கு வசிக்கின்ற மக்கள் மலையாளிகள் என்ற செட்யூல்டு டிரைப் மக்கள். ஆனால் அவர்கள் கவுண்டர் பட்டம் போட்டு அழைத்து கொள்கிறார்கள். எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின் கீழ் இந்த பகுதிகள் முதன்முதலில் சர்வே செய்யப்பட்டது. இங்கு UDR (யுடிஆர்) இல்லை, OSLR

ஊட்டியில் களப்பணி வாய்ப்பு

Image
 24-04-2024 (நாளை) ஊட்டியில் களப்பணி வாய்ப்பு இருப்பவர்கள் சந்திகலாம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #ooty #fieldwork #ஊட்டி #களப்பணி

ரோம நாட்டுடன் வணிகம் செய்த அரிக்கமேடு துறைமுகம்!

Image
 ரோம நாட்டுடன் வணிகம் செய்த அரிக்கமேடு துறைமுகம்  கி. மு 2 ம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் அரிக்கமேடு என்ற துறைமுகம் ரொம்ப பிஸியாக இயங்கி வந்து இருக்கிறது. அக்காலத்தில் ரோம் நகரில் மாலுமிகள் கையில் இருந்த கடல் வழி வரைபடத்தில் (Periplus Maris Erythraeid) அரிக்கமேடு இருந்து இருக்கிறது. திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் எப்படி ஒரு மண் மேடாக இருக்கிறதோ அதேபோல ஒரு மண் மேடாக இது இருக்கின்றது. நிறைய பானை ஓடுகள், பீங்கங்கள் பொம்மைகள் என்று நிறைய கிடைத்து இருக்கிறது அது பாண்டிச்சேரி அருங்காட்சியாகத்தில் வைத்து இருக்கிறார்கள். நான் நின்று கொண்டு இருப்பது ரெண்டாயிரம் வருசத்து கட்டுமானம். அக்காலத்தில் சரக்கு வைக்கும் இடமாக (warehouse ) இருந்து இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Arikamedu #port  #traded #Rome #country #Pondicherry #searoute #map #Periplusmarrieserythrian #Tirunelveli  #Adichanallur #mud #mound #potsherds #ceramic #dolls #ceramicdolls #pondicherrymuseum #museum

இறப்பு சான்றுக்கு - நடுக்கல்!

Image
யாராவது இறப்பு சான்று கேட்டால் இந்த நடுக்கல்லை கொண்டு போய் காட்ட வேண்டியதுதான்! களப்பணியின்போது பெரம்பலூர் அருகில். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Perambalur #certificate #deathcertificate #stone #middlestone #fieldwork

ஔவை பாட்டிக்கு கோவில்!

Image
பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே ஒரு கிராமத்தில் ஔவையார் அவர்களுக்கு சிறு கோயில் இருக்கிறது. ஔவை பாட்டிக்கு காவலாக முருகனும் பிள்ளையாரும் காவலுக்கு நிற்கிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் கும்பிடுகிறார்கள். என்று சொன்னார்கள். ஔவைக்கு கோயில் என்பது மகிழ கூடிய ஒன்று! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Perambalur #Siruvachur #temple #Avvaiyar #avvaiyartemple #tamilnadu #aathichudi #tamilstatus #tamilquotes  #aathichoodi #tamilliterature  #keezhadi #tamizh #tamilsangam #avvai #tamilproverbs #tamilkavidhai  #indianquotes #tamilachi #murugan #pilliayar

அரை மணி நேரத்தில் என்னை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார்!

Image
தஞ்சையில் புண்ணைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் நன்றாக கணக்கு சொல்லும் வாத்தியாரை தஞ்சாவூர் ராதா மேம் மூலமாக சந்தித்தேன். நிலசிக்கல்களுக்கு தான் கூட்டம் வரும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் சாதாரண பொதுஜனம் அதிகம் பேர் தங்கள் வாழ்க்கை பற்றி கணக்கு கேட்க நின்று கொண்டு இருந்தார்கள். அவரும் பலரின் மன அழுத்தங்களை தனது பேச்சால் heal செய்து கொண்டு இருந்தார். அறை முழுதும் அம்மன் படத்தை பெரிய அளவில் வைத்து ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருந்தார் அவர் என்னைபார்த்த அரை மணி நேரத்தில் என்னை பற்றி புட்டு புட்டு வைத்துவிட்டார்.எப்படி சொன்னார் என்று இன்னும் புரியவில்லை. அதே போல் அவரின் நில சிக்கலை சரி செய்யும் வேலையும் என்னிடம் ஒப்படைத்தார் அந்த பணியை நான் எடுத்துக்கொண்டு தஞ்சாவூர் விட்டு கிளம்பினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டின் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tanjavur #Tanjai #Punnainallur #temple #Mariammantemple #Mariamman #fieldwork